ராகுல், பிரியங்கா காந்தியை புகழ்ந்த பாஜக கூட்டணி கட்சி..
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடின உழைப்பாளிகள் என பாஜக-வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடின உழைப்பாளிகள் என பாஜக-வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படது. இந்நிலையில் நாளை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாஜ தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.
இந்நிலையில், பாஜக-வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.
கடந்த மக்களை தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்கிரஸ் கட்சி பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்கிரஸ் எதிர்கட்சியாகி விடும்; ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவராகிவிடுவார்.
இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கடின உழைப்பிற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 19-ஆம் நாள் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. வெளியான கருத்துகணிப்புகளின் படி மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் தீர்ப்பு என்னவென்பதா நாளை தெரியவரும்...