TN 12th Standard Public Examination Result 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதியிருந்தனர். அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 ஆகும். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்வு எழுதினார்.
அந்த வகையில் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, மாணவியர் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும் (96.44%), மாணவர்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேரும் (92.37%) தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றார். வழக்கத்தை போன்ற மாணவர்களை விட மாணவியரே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றனர், அதுவும் மாணவியர்கள் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். zeenews.india.com/tamil/tamil-nadu/12th-board-exam-result-tamil-nadu-will-be-declared-know-how-to-check-result-via-sms-or-online-502499
கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 94.03% ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.56% ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வெழுதி 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். மொத்தம் 7 ஆயிரத்து 532 மேல்நிலைப் பள்ளிகளில், 2 ஆயிரத்து 478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. அதில் 397 பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
எந்த மாவட்டம் முதலிடம்?
மொத்தம் தமிழ்நாட்டின் 34 கல்வி மாவட்டங்களில் (காரைக்கால், புதுச்சேரி உள்பட) திருப்பூர் 97.45% தேர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் 97.42% தேர்ச்சியை பெற்று இரண்டாம் இடத்தையும், அரியலூர் மாவட்டத்தில் 97.25% தேர்ச்சியை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. எப்போதும் முதலிடத்தை பிடிக்கும் நாமக்கல் மாவட்டம் 96.10% தேர்ச்சி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.72% தேர்ச்சி பதிவாகியுள்ளது.
எந்த மாவட்டத்திற்கு கடைசி இடம்?
இதில் காரைக்காலில் 87.03% தேர்ச்சி பதிவாகி கடைசி இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் அடுத்ததாக 90.47% தேர்ச்சி பதிவாகியுள்ளது. அதற்கடுத்ததாக நாமக்கல் 91.19 சதவீதமும், திருவள்ளூர் 91.32 சதவீதமும், கிருஷ்ணகிரி 91.87 சதவீதமும் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் எந்த மாவட்டம் டாப்?
அதேபோல் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் சார்ந்த செயல்பாட்டில் திருப்பூர் மாவட்டம் 95.75 சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை 95.56 சதவீதமும், ஈரோடு 95.63 சதவீதமும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் சார்ந்த செயல்பாட்டில் காரைக்கால் 81.65 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. திருவள்ளூரில் 84.70 சதவீதமும், மயிலாடுதுறை 85.42 சதவீதமும் பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ