புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மற்றும் கோவாவில் அடுத்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பிரசாரம் நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. 


டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.


பஞ்சாபில் முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் இரண்டாம் கட்டமாக 29 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.