பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் இன்று அறிவித்தார்.


இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 


லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.