அரியானாவில் பாஜகவுக்கு சிக்கல்.. இந்த முறை வெற்றி சாத்தியமா?
BJP Face Internal Dissent In Haryana: வரவிருக்கும் தேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் தொடர்பாக அரியானாவில் பாஜகவிற்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
Haryana News: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை நிறைவடைந்த நிலையில், பாஜகாவில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால் தேர்தல் நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் உடன் கூட்டணி குறித்து உடன்பாடு ஏற்படாததால், ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர சிங் ஹூடா, மல்யுத்த வீராங்கனை தினேஷ் போகத், காங்கிரஸ் எம்பி ரந்தீப் சுர்ஜிவாலாவின் மகன் ஆதித்யா உள்ளிட்ட 88 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பாஜாக தரப்பில் 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் நயாப் சைனி லத்வா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் நயாப் சிங் சைனியின் பாஜக அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சரான த்ரிகா தான்.
நர்னால் தொகுதிக்கு ஓம் பிரகாஷ் யாதவை கட்சி தேர்ந்தெடுத்ததில் அதிருப்தி அடைந்த ஷிவ் குமார் மேத்தா தனது ராஜினாமா கடிதத்தை கற்சி மேலிடத்தில் அளித்தார்.
பாஜாக கர்ணால் மாவட்ட செயலாளர் யோகேந்திர ராணாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேச்சையாக களமிறங்குகிறார்.
ஹரியானா பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சத்யவரத் சாஸ்திரி, கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஹதின் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான கேஹர் சிங் ராவத், டிக்கெட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார்.
இதேபோல முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலாவும் பாஜாகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.
ஜிந்தால் குழுமத் தலைவர் நவீன் ஜிந்தாலின் தாயார் சாவித்திரி, அமைச்சர் கமல் குப்தாவை எதிர்த்து ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரியானா மாநிலத்தை பொறுத்த வரை உட்கட்சி பூசல்கள் மற்றும் ராஜினாமாக்கள் இருந்தபோதிலும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெறுவதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸுக்கு எதிரான கடுமையான தேர்தல் போருக்குத் தயாராகும் வேளையில் கட்சியின் தலைமை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மறுபுறம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கட்டத் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதால், பலத்த பாதுகாப்புடன் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க - டெல்லி கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ