கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தேர்தல் திரிபுரா மாநிலத்திலும், 27-ம் தேதி மேகாலயா மாநிலத்திலும், நாகாலாந்து மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தன. திரிபுரா மாநிலத்தில் 74 சதவீத வாக்குகளும், மேகாலயா மாநிலத்தில் 67 சதவீத வாக்குகளும், நாகாலாந்து மாநிலத்தில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மூன்று மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.


திரிபுரா


60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், பாஜக மற்றும் மக்கள் முன்னணி கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக வெற்றி பெற்றது. அதாவது பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.


கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் ஆட்சி நடத்தி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. 1988-ம் ஆண்டு பிறகு மீண்டும் தோல்வியை சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக. ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேகாலயா


மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 21 இடங்களும், தேசிய மக்கள் கட்சி கூட்டணி 19 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 2 இடங்களும், பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்களும் மற்றும் சுயேச்சைகளுக்கு 3 இடங்களும் கிடைத்தன. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.


மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மற்ற இதர கட்சிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளது. அதேபோல 2 இடங்கள் பெற்றுள்ள பாஜக-வும் மற்ற கட்சிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளது. இங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து இனிவரும் நாட்களில் தெரியும். 


 


நாகாலாந்து


நாகாலாந்து மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.


நாகாலாந்து மாநிலத்தில் பாஜக மற்றும்  தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த கூட்டணி மொத்தம் 29 இடங்களை பெற்றுள்ளது. அதேவேளையில், நாகா மக்கள் முன்னணி கட்சி 27 இடங்களை பெற்றுள்ளது. மற்ற சிறிய கட்சிகள் 6 இடங்களை வென்றுள்ளது.
அதிக இடங்களை வென்றுள்ள நாகா மக்கள் முன்னணி பாரதீய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது. எனவே நாகாலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.