எதிர்வரும் மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார்.


இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.


இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கான ஆகிய மாநில தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த பட்டியலின்படி 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்திற்கான 177 வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சொஹான் தொடர்ந்து புதானி தொகுதியில் போட்டியிடுகின்றார்.


40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்திற்கு 24 வேட்பாளர்களையும், 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்திற்கு 28 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.


மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018


மிசோரம் | 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018


தெலங்கானா | 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - டிசம்பர் 7, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018