கொல்கத்தா: மேற்கு வங்க பிஜேபி கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாம் விரைவில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசாங்கம் கவிழும். அவர்கள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வார்களா? என்பது கேள்விக்குறி என்று கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசு தானாகவே கவிழும். அதைப் பற்றி இப்பொழுது பேசுவது சரியில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கான பாஜக தயாராகி வருகிறது. அதில் திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கும் வலுவான கட்சியாக பாஜக இருக்கும். அதற்கான முயற்ச்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஏனென்றால் மேற்கு வங்கத்தில் மக்கள் மாற்று அரசு வேண்டும் என விரும்புகிறார்கள். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் வெறுத்துள்ளனர் எனவும் கூறினார். 


நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் 42 தொகுதிகளிளை கொண்ட மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. 18 இடங்களை வென்றது. திரிணமுல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டும் வென்றது, இது 2014 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும் போது, திரிணமுல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றிருந்தது. பாஜக வெறும் 2 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என பலர் பாஜக-வில் இணைந்து வருகின்றனர். இது மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. அதேவேளையில் பாஜக-வும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு, தங்கள் பக்கம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரை இழுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.