தெலுங்கானா மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் நடைப்பெற்று வந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றது. முன்னதாக தெலுங்கான முதல்வராக பதவி வகித்து வந்த சந்திரசேகர் ராவ் அவரகள் தனது ஆட்சி முடிய 9 மாதங்கள் மீதம் இருந்த நிலையில் சட்டப்பேரவையைக் கலைத்து அறிவித்தார். அதற்கு ஆளுநர் ஈ.எல்.நரசிம்மனும் ஒப்புதல் அளித்தார். தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்ந்து வருகிறார்.


அதேவேலையில் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அதே வேலையில் தெலங்கானா மாநிலத்துக்கு சேர்ந்து தேர்தல் நடத்திடவேண்டும் என்ற நோக்கில் சந்திரசேகர் ராவ் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து தேர்தலுக்கு தயாராகி இருக்கிறார். இதற்கு ஏற்றார்போல் 105 தொகுதிகளில் தனது கட்சியில் வேட்பாளரையும் அறிவித்துள்ளார்.


மேலும் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டனி இன்றி தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் ராவ் உள்ளதாக அவரது நடவடிக்கைகள் காண்பிக்கின்றது. 


ஆனால் தேர்தல் ஆணையமோ முதல்வர் சந்திர சேகர் ராவ் முடிவிற்கு கடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தெலங்கானா மாநிலத்துக்கு எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்குப் போட்டியாக பாஜகவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. வரும் 15-ம் நாள் முதல் பாஜக தலைவர் அமித் ஷாவும் தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி வரும் 15-ஆம் நாள் மெகபூப் நகரில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுவார் என தெரிகிறது!