ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக மாநில செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் மாநில பாஜக செயலாளர் அனில் பாரிஹர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேற்று மாலை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் ரவிந்தர் ரெய்னா அளித்த பேட்டியில், “ நேற்று மாலை 8 மணியளவில் பாஜக மாநில செயலாளர் அனில் பாரிஹர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களது உயிர் பிரிந்தது” என்றார். 


பாஜக மாநில செயலாளர் அனில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து கிஷ்த்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.