டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை  தீவிரவாதி என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் விமர்சித்துள்ளதால் பரபரப்ப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான கடுமையான தாக்குதலில், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) தலைவர் ஒரு பயங்கரவாதி என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.


70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. 


இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்றும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவினர் தன்னைத் தீவிரவாதி என்று அழைத்து வருவதாகவும் ஆனால் நான் டெல்லி மாநிலத்துக்கு முதல்வர் என்றும் கூறினார். பல மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருப்பார்கள், சிலர் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள் ஆனால் நான் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்து வருகிறேன். நீங்கள் என்னை தீவிரவாதி என்று நினைத்தால் தாமரை சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள். நான் உங்களின் மகன் என்று நினைத்தால் ஆம் ஆத்மி சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்திருந்தார்.


இதை தொடர்ந்து, இந்த நிலையில்தான் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரவாதி தான் என்றும், அதற்கு நிறைய ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அடிக்கடி ஒரு போராட்டக்காரர் என்று கூறிக் கொள்வதாகவும், போராட்டக்காரர்களுக்கும், தீவிரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 


அரவிந்த் கெஜ்ரிவால் அப்பாவி முகத்தில் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும் பகீர் குற்றச் சாட்டை அவர் முன்வைத்துள்ளார். முன்னதாக பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்திருந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் பர்வேஷ் வர்மாவுக்கு 96 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.