இமாச்சல பிரதேசத்தின் ஒருகிணைப்பு குழு கூட்டத்தில் இன்று காலை கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திர சிங் தோமர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் பாஜக, தற்போது தனிபெரும்பான்மையோடு வெற்றிப்பெற்று 6 வது முறையாக, தங்களது ஆட்சியை பலமாக ஊன்றி உள்ளது. 


அந்த வெற்றியை தொடர்ந்து இன்று இமாச்சல பிரதேசத்தில் நடந்த கோர் குழு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டனர்.



அவர்களை முதல் மந்திரி வேட்பாளர் பிரேம் குமார் வரவேற்றார். அப்போது பா.ஜ.க ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களிலிருந்து முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர்.



182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.


இதேபோன்று 68 உறுப்பினர்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18-லிருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.


இதில் குஜராத், இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கார், அருணாசல பிரதேசம், அரியானா ஆகிய 9 மாநிலங்களில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் அரசு அமைத்திருக்கும் நிலையில், அசாம், கோவா, மணிப்பூர், ஜார்கண்ட், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. குறிபிடத்தக்கது.