கடந்த ஒரு வருடத்தில் அருண் ஜெட்லி உட்பட பாஜக-வின் ஏழு உயர் தலைவர்கள் இழப்பு அக்கட்சி தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள AIIMS-ல் இன்று காலமானார். நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லி ஆகஸ்ட் 9-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக AIIMS-ல் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.


பாஜக கடந்த ஒரு வருடத்தில் அருண் ஜெட்லி உட்பட அதன் ஏழு உயர் தலைவர்களை இழந்துள்ளது. அவர்களில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் ஆகியோர் அடங்குவர்.


  • பால்ராம்ஜி தாஸ் டாண்டன் - ஆகஸ்ட் 14, 2018


சத்தீஸ்கர் முன்னாள் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் டாண்டன், 14 ஆகஸ்ட் 2018 அன்று காலமானார். அவருக்கு 90 வயது. மனச்சோர்வடைந்த நிலையில் அவர் Br Ambedkar நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.


  • அடல் பிஹாரி வாஜ்பாய் - ஆகஸ்ட் 16, 2018


முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 16 ஆகஸ்ட் 2018 அன்று காலமானார். சிறுநீரகக் குழாயில் தொற்று, மார்பில் இறுக்கம் ஏற்பட்டதாக ஜூன் 11, 2019 அன்று AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி ஆகஸ்ட் 16, 2018 அன்று அவர் காலமானார்.


  • மதன் லால் குரானா -அக்டோபர் 27, 2018


டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா அக்டோபர் 27, 2018 அன்று காலமானார். 1993 முதல் 1996 வரை டெல்லி முதல்வராக இருந்த மதன் லால் குரானா, 2001-ல் ராஜஸ்தான் ஆளுநராக பதவி வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • அனந்த்குமார் -12 நவம்பர், 2018


பாஜக தலைவர் அனந்த்குமார் நவம்பர் 12, 2018 அன்று பிறந்தார். அவரும் பல முறை எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டவர். அடல் பிஹாரி வாஜ்பாயின் கீழ் பாஜக அரசாங்கத்திலும் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிலும் மந்திரி பதவிகளை வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.


  • மனோகர் பாரிக்கர் - 17 மார்ச், 2019


கோவாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் மார்ச் 17, 2019 அன்று காலமானார். அவர் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.


  • சுஷ்மா ஸ்வராஜ் - ஆகஸ்ட் 6, 2019


பாஜக-வின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகஸ்ட் 6, 2019 அன்று காலமானார். அவருக்கு வயது 67. மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இவர் நீண்ட காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் நல குறைவு காரணமாகவே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். பின்னர் தனக்கு மாநிலங்களவையிலும் பதவி வேண்டாம் என கட்சி மேலிடத்தில் வேண்டுகோள் விடுத்தார்.