வளர்ச்சி, தேசியவாதம், இந்துத்துவா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிஜேபி கட்சி மக்களவை தேர்தல் அறிக்கையை வரும் திங்கள்கிழமை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. 


வருகிற திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புக்கான தனி அமைச்சகம், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், தீவிரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை, வலிமையான இந்தியா போன்ற அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.


அயோத்தி, காசி, மதுரா ஆகிய புண்ணிய தலங்களுக்கான தனி பகுதியை உருவாக்குவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மக்கள் விருப்பப்படி ராமர் கோவிலை கட்டுவது, கங்கையுடன் நாட்டின் முக்கிய நதிகளை இணைப்பது போன்ற திட்டங்களும் இடம்பெறும் என்று பாஜக மூத்த தலைவர்கள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து கட்சித்தலைவர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.