மம்தா வங்கதேச பிரதமர் ஆகிவிடலாம் -பாஜக MLA சுரேந்திர சிங்!
வங்கதேசிகளை மம்தா பானர்ஜி காக்க விரும்பினால் அவர், வங்கதேசத்தின் பிரதமர் ஆகிவிடலாம் என பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்!
வங்கதேசிகளை மம்தா பானர்ஜி காக்க விரும்பினால் அவர், வங்கதேசத்தின் பிரதமர் ஆகிவிடலாம் என பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்!
பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் சனிக்கிழமை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) விவகாரம் தொடர்பாக அவதூறாக பேசியதோடு, மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாக்கு வங்கியை அப்படியே வைத்திருக்க மம்தா பங்களாதேஷியர்களைப் பாதுகாக்க விரும்பினால், அவர் பங்களாதேஷின் பிரதமராக வருவது நல்லது எனவும் விமர்சித்துள்ளார்.
"மம்தா பானர்ஜியின் மோசமான நாட்கள் வரவிருக்கிறது, அவர் தனது மொழியை மாற்ற வேண்டும். பங்களாதேஷ் மக்களின் ஆதரவுடன் அவர் அரசியல் செய்ய விரும்பினால், அவர் பங்களாதேஷ் செல்ல வேண்டும். அவர் பங்களாதேஷ் பிரதமராவது நல்லது, அதற்கு தைரியம் உள்ளதா அவருக்கு?"என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுரேந்திர சிங் செய்தியாளர்களின் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ, தங்கள் இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்தும் பொருத்தமான ஆவணங்களைக் காட்டத் தவறியவர்கள் தகுந்த மரியாதையுடன் தங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சிங்கின் கருத்து மீண்டும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் அசாதாரண செயல்திறன் குறித்து பேசிய சிங், "லங்கா மக்கள் (இலங்கை) அனுமன் ஜியை அனுமதிக்கவில்லை, ஆனால் அவர் அங்கு செல்ல முடிந்தது. அதேபோல், யோகியும் அமித் ஷாவும் மேற்கு வங்கம் நுழைந்தார்கள்.
மம்தா பானர்ஜி வங்காளத்தின் அரசியல் ராணி (லங்கினி) என வர்ணிக்கப்படுகிறார், ராம் அங்கு அறிமுகமானார், விரைவில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். என்.ஆர்.சி வங்காளத்தில் செயல்படுத்தப்படும் மற்றும் அனைத்து பங்களாதேஷியர்களுக்கும் இரண்டு பாக்கெட் உணவு வழங்கப்படும், மரியாதையுடன் தங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்" எனவும் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., இந்தியாவில் வாழும் வெளிநாட்டினரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. "மம்தா இந்தியாவில் வாழ அனுமதிக்கப்படுகிறார், ஆனால் அவர் தேச விரோத உணர்வுகளிலிருந்து உத்வேகம் பெற்றால் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.