புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளைக் கொண்டாட நாடு தயாராகி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் ஃபிரோஜியா, விடுதலைப் போராட்ட வீரரான போசுக்கு 'பாரத் ரத்னா' வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள அலோட் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிரோஜியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, நாட்டின் மிக உயர்ந்த சிவில் மரியாதையான பாரத் ரத்னா நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு (Netaji Subhas Chandra Bose) வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


கலை, இலக்கியம் மற்றும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் ஆற்றப்படும் சேவைக்காகவும், பொது சேவைகள் மற்றும் சமூக சேவைகளுக்கான அங்கீகாரமாகவும் இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா (Bharat Ratna) கௌரவம் அளிக்கப்படுகிறது.


நேதாஜியின் பிறந்த நாள் (ஜனவரி 23) ஒவ்வொரு ஆண்டும் 'பராக்ரம் திவஸ்' என்று கொண்டாடப்படும் என்று நரேந்திர மோடி அரசு 19 ஜனவரி 2021 அன்று அறிவித்தது. தன்னலமற்ற சுதந்திரப் போராளியான சுபாஷ் சந்திர போசை கௌரவிப்பதற்கும் நினைவுகூருவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை 'பராக்ரம் திவஸ்' ஆக கொண்டாட மத்திய அரசு (Central Government) முடிவு செய்தது.


நேதாஜியைப் போல, நாட்டும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தைரியத்துடனும் அச்சமின்றியும் செயல்பட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படும்.  உறுதியோடு துன்பங்களை எதிர்கொள்ளவும், தேசபக்திக்கான உற்சாகத்தை வளர்த்துக்கொள்ளவும் இன்றும் நேதாஜி ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறார்."


ஜனவரி 23 அன்று, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் இருந்து அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கும். பிரதம மந்திரி நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். நேதாஜியின் வாழ்வை கருப்பொருளாகக் கொண்ட 'அம்ராநூதோன்ஜௌபோனரிதூட்' என்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறும்.


ALSO READ: நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு


"இந்த நிகழ்வில் ஒரு நினைவு நாணயமும் தபால்தலையும் வெளியிடப்படும். '21 ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷின் கொள்கைகளை மீண்டும் சென்று பார்வையிடல்’ என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டுக்கும் அன்று கொல்கத்தாவின் தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அறிவித்தார்.


நேதாஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்திய ரயில்வே நாட்டின் மிகப் பழமையான ரயில் எண் 12311/12312 ஹௌரா-கால்கா மெயிலை 'நேதாஜி எக்ஸ்பிரஸ்' என்று பெயரிட்டுள்ளது. ஹௌரா மற்றும் கால்கா இடையே டெல்லி வழியாக ஹௌரா-கால்கா மெயில் இயங்குகிறது.


இதற்கிடையில், திரிணமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ரே, பிரதமர் மோடிக்கு ‘நேதாஜி கோப்புகளை’ வகைப்படுத்தவும், ‘இந்திய தேசிய இராணுவத்தின் வரலாறு 1942-45’ –ஐ வெளியிடவும் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.


நேதாஜி ஜெயந்தியை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு மேற்கு வங்க முதலமைச்சரும் டி.எம்.சி தலைவருமான மம்தா பானர்ஜி (Mamata Banerjee) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


ALSO READ: குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம்பெற உள்ள ரபேல் விமானம்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR