சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக அறிவித்திருந்தார்.
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 23 அன்று, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் இருந்து நேதாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார்.
நேதாஜி சுபாஷ் சுந்திரபோசுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது, அவருக்கு என்ன நடந்தது என அறிந்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்று மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத்தின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு வாகன ஓட்டுநராக இருந்த நிஜாமுதீன் (116) நேற்று காலமானார்.
ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தக்வா கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் வயோதிகப் பிரச்னை காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை காலை மறைந்தார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநராக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் பணியாற்றியவர் நிஜாமுதீன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஜப்பானிய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையானது இன்று பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த விசாரணை அறிக்கையில் கூறியது:- 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18-ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமானதளம் அருகே நடந்த விமான விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.