பா.ஜ.க எம்.பி. நானா படோல் தனது பதவியை ராஜினாமா செய்தார்!
குஜராத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் பரபரப்பான நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் நானா படோல் விலகள் குறித்து குழப்பங்கள் நிலவி வருகின்றது!
தனது ராஜினாமாவிற்கு காரணம் "விவசாயப் பிரச்சினை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகியவற்றை சமாளிக்காத அரசாங்கத்தின் இயலாமையை" தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும் அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய வில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக மராத்திய விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளித்து மக்கள் மனதை வென்றவர் நானா படோல் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா போராடிய போது அவருக்கு ஆதரவு கரம் நீட்டினார் நானா படோல்.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி. நானா படோல் அவரது பதவியை ராஜினாமா செய்ததாகவும், கட்சியில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பாஜக கோட்டையான குஜராத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் பரபரப்பான நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் நானா படோல் விலகள் குறித்து குழப்பங்கள் நிலவி வருகின்றது!