உன்னாவ் பாஜக எம்.பி. (BJP MP) சாக்ஷி மகராஜ், தனக்கு தொலைபேசியில் ஒரு கொலை மிரட்டல் வந்ததாக


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உன்னாவ் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். புகாரில், திங்களன்று இரண்டு முறை பாகிஸ்தான் எண்ணிலிருந்து (+923151225989) தனக்கு கொலை மிரட்டல் (Death Threat) வந்ததாகவும் அதில் தன் வீட்டில் குண்டு வைக்கப்படும் என கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அடையாளம் தெரியாத நபர் மீது சாக்ஷி மகராஜ் (Sakshi Maharaj) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


முகமது கஃபார் என்ற தன் நண்பனை காவல்துறை பிடிக்க உதவியதன் மூலம், சாக்ஷி மகராஜ் அவரது மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தொலைபேசியில் அழைத்த நபர் தன்னை மிரட்டியதாக சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார்.


பத்து நாட்களுக்குள் சாக்ஷி மகராஜையும் அவரது உடன் இருப்பவர்களையும் கொல்வதாக அந்த நபர் மிரட்டியுள்ளார்.


ALSO READ: தாக்குதல் நடத்த பெண் தீவிரதவாதிகள், பணம் இடம் மாற Tiffin Box: ISI-ன் புதிய சூழ்ச்சி!!


முஜாஹிதீன்கள் சாக்ஷியை 24 மணி நேரம் கண்காணிப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தவுடன் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்றும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.


தொலைபேசியில் அழைத்தவர் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பல தலைவர்களையும் அநாகரீகமாக பேசியதாகவும் சாக்ஷி மகாராஜ் கூறினார்.


அந்த நபர், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் ஆகியோரின் பெயர்களையும் எடுத்ததாகவும் ‘கஜ்வா-இ-ஹிந்த்’ என்ற பெயரில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது குறித்தும் பேசியதாகவும் பாஜக எம்.பி. தனது புகாரில் கூறியுள்ளார்.


இதற்கு முன்னரும் பல பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக சாக்ஷி மகாராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


ALSO READ: இந்தியாவில் மத கலவரங்களை தூண்ட ISI சதி.. VOIP அழைப்பின் மூலம் அம்பலம்...!!!