ஜம்மு: முதல்முறையாக காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் 98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 310 பஞ்சாயத்து கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 81 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி மிக மோசமான தோல்வி என்றும், அந்த தோல்வியை பாஜக மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொகுதி மேம்பாட்டு கவுன்சில் (BDC Elections) தேர்தலில் பிடிபி, தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இந்த தேர்தலை அந்தக்கட்சிகள் புறக்கணித்தன.


ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தரப்பில் மேலும், இப்போது முடிவடைந்த பஞ்சாயத்து கவுன்சில் தேர்தல்களில் பாஜகவை பெருமளவில் நிராகரித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தது. இந்த தேர்தலில் பெரிய எதிர்க்கட்சிகளும் எதுவும் இல்லாத நிலையில் இந்தத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு பாதை மட்டுமே என்றும், உண்மையான தேர்தல் முடிவுகள், மாநிலத்தில் நடைபெறும் பொதுதேர்தலின் போது வெளிப்படும் என்றும் கூறியுள்ளது.


இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பி.சி.சி துணைத் தலைவர் ராமன் பல்லா, தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா மற்றும் பொதுச் செயலாளர் மன்மோகன் சிங் கூறியது, பி.டி.சி (BDC) தேர்தல் முடிவுகளை பாஜக மறைக்க விரும்புவதாகவும், எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில் தேர்தலை சந்தித்து சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 


எதிர்க்கட்சிகள் போட்டியிடும் நிலையில் இல்லை என்பதை முழுமையாக அறிந்த பாஜக இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனாலும் அவர்களை மக்கள் நிராகரித்து உள்ளனர். காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் மிக மோசமான தோல்வியை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.