182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெற்றது. பின்னர் வாக்குபதிவு நடைப்பெற்ற 6 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு டிசம்பர் 17 அன்று நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை டிச., 18 நடைப்பெற உள்ளது. 


பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்தன.


நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 



இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றி பெறும் என அறிவித்தன. இதனையடுத்து நாளை முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பாஜக-வினர் தங்கள் வெற்றியை கொண்டாட கட்சி அலுவலகத்தினை அலங்கரித்து வருகின்றனர்!