துல்லிய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: அமித் ஷா
பாலகோட் தாக்குதலில் 250-க்கும் அதிகமான ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாலகோட் தாக்குதலில் 250-க்கும் அதிகமான ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதவாது:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாது என பலரும் நினைத்தார்கள். ஆனால் தாக்குதல் நடந்து 13 வது நாளிலேயே இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது. உரி தாக்குதலுக்கு பின் இந்திய ராணுவம் மிகத்துல்லியமாக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. 250-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு மிகப்பெரிய துல்லியத் தாக்குதல் நடத்தபட்டு உள்ளது. இந்த தாக்குதலில் நமது ராணுவ வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடத்தப்பட்டது. இதற்க்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் எனக் கூறினார்.