பாஜக ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு!!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் 14-ம் தேதி(புதன் கிழமை) தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் இந்த மாதம் 28-ம் தேதி(புதன் கிழமை) ஆகும்.
இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தேசிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முத்த மந்திரிகளான ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் மாநில கட்சிகளான அதிமுக, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் பாஜக-வுக்கு ஆதரவாக தெரிவித்துள்ளனர்.
பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.
பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொண்ட பிறகு தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
எனவே பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.