அரபு நாடுகளின் அழுத்தம்; சாட்டையை சுழற்றிய பாஜக
முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரின் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அதிமுக தலைவர்களின் கருத்து குறித்து பாஜகவுக்கு கவலை இல்லை - அண்ணாமலை
இதற்கிடையில் தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
இதையடுத்து, கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகள், பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை அழைத்து நேரடியாகவும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன்படி இந்த விவகாரம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ஈரான் நாட்டைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், சவூதி அரேபியாவும் மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளுக்கு இந்தியா பதில்
இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அதன்படி அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜக நுபுர் சர்மா மற்றும்நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, இவர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை ஆசியாவிற்கான குவைத்தின் துணை வெளியுறவு மந்திரி வரவேற்றுள்ளார்.
அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. அத்துடன் சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
ட்விட்டரில் கண்டனம்
இதற்கிடையில் இவர்களின் சர்ச்சை பேச்சால் அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓமன் நாட்டின் கிராண்ட் முப்தி ஷேக் அல் கலீலி இதனை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக மீதும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #BoycottIndia என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
மேலும் படிக்க | பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம், அதிமுக தனித்து நிற்க தயார் - செல்லூர் ராஜூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR