புதுடெல்லி: மகாராஷ்டிராவில் (Maharashtra) அமையவிருக்கும் ஆட்சியின் முதல்வர் பதவியில் சமரசம் செய்ய பாஜக (BJP) தயாராக இல்லை. சிவசேனாவுக்கு (Shiv Sena) துணை முதல்வர் பதவி வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. நமக்கு வட்டாரங்கள் அளித்த ஆதாரங்களின்படி, நவம்பர் 8-க்கு முன்னர் மகாராஷ்டிராவில் நிலவிவரும் முட்டுக்கட்டைகள் தீர்க்கப்படும் என்று பாஜக நம்புகிறது. சிவசேனாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாஜக கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. பாஜகவில் சுயேச்சைகள், சிறு கட்சி எம்.எல்.ஏக்கள் உட்பட 121 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநிலத்தில் மைனாரிட்டி அரசாங்கத்தை அமைக்க பாஜகவுக்கு விருப்பம் இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேளையில் ஐம்பது-ஐம்பது சூத்திரத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. ஆதாரங்களின்படி, அமைச்சரவையில் இடம் அளிக்கவும், சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் பாஜக தயாராக உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மறுத்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதே நேரத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்தித்தார். கூட்டத்திற்குப் பிறகு, விரைவில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் 50-50 சூத்திரம் குறித்து எந்த பதிலும் அவர் கூறவில்லை. 


மறுபுறம், விவசாயிகள் சந்தித்த இழப்புகளை குறித்து அறிந்துக்கொள்ள மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்திற்கு சென்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அடுத்த 2 முதல் 3 நாட்களில் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து நீங்கள் அறிவீர்கள் என்று கூறினார். மேலும் உங்களை பார்க்க வந்த சுற்றுப்பயணம் ஹெலிகாப்டர் பயணம் அல்ல, தரை சுற்றுப்பயணம் என்று கூறிய உத்தவ் தாக்கரே, விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்துள்ளார்.


அதேபோல மும்பையில் நடைபெற்ற என்.சி.பி (Nationalist Congress Party) கூட்டத்தில், இந்த தேர்தலில் இளைஞர்கள், முஸ்லிம்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஷரத் பவார் (Sharad Pawar) தெரிவித்தார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் தன்னை ஆதரிக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். விவசாயமும் விவசாயிகளும் சிக்கலில் இருப்பதாக சரத் பவார் கூறினார்.