Karnataka Election Result: கர்நாடகாவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பாஜக கைவிடாது, ஆட்சி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துமோ என்ற அச்சத்தில், காங்கிரஸ் தனது புதிய எம்.எல்.ஏக்களை பாதுக்காக்கும் முயற்சிகளை தொடங்கிவிட்டது. பாஜக பெரும்பான்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்து போகலாம். ஆனால் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக வெளியான வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளதாக தெரிகிறது. 224 இடங்கள் கொண்ட சட்டசபையில், 70 முதல் 75 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 122 இடங்களையும், பாஜக 71 இடங்களையும், ஜேடிஎஸ் 24 இடங்களையும் பெறுகின்றன.


பாஜகவின் திட்டம் என்ன?
 
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், எங்களின் எண்ணிக்கை பெரும்பான்மையை விட குறைவாக இருந்தால், பாஜகவில் இருந்து கட்சி மாறி வெற்றி பெற்ற முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டுவர முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.


அவர்கள் மீது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க, இந்தத் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, பாஜக ஆட்சிக்கு வழி வகுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.


மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்


சுயேச்சை வேட்பாளர்கள் யாரேனும் வெற்றி பெற்றால் அவர்களின் ஆதரவைப் பெறவும் பாஜக முயற்சி செய்யும். அறுதிப் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், பாஜக ஜே.டி.எஸ் கூட்டணி அமைக்கும், அப்போது எச்.டி. குமாரசாமி முதல்வராக பதவி ஏற்பார்.


மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த குமாரசாமி, சனிக்கிழமை காலை வீடு திரும்பிய நிலையில், கர்நாடக முதல்வராகும் விருப்பம் குறித்து பாஜகவிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.


காங்கிரஸின் திட்டம் இது


காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், அதன் பிறகும் அக்கட்சி உஷார் நிலையில் உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் அனைத்து கட்சி மூத்த தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே. சிவக்குமார், ஜெகதீஷ் ஷெட்டர், எச்.கே. பாட்டீல் மற்றும் பல உயர்மட்டத் தலைவர்கள், பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.


காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டிலும் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஆட்சி அமைப்பதே அக்கட்சியின் முதல் முன்னுரிமை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | Karnataka Elections Result: எந்த தொகுதியில் யார் வெற்றி? முழு விவரம்!


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை நிலவும் நிலையில், ஆட்சியமைக்கும் வரை சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க தமிழ்நாட்டை தேர்வு காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி இருக்கும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உறுப்பினர்களை தங்க வைப்பது பாதுகாப்பானது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிரது. 


விமான நிலையம் அருகே தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையின் கிழக்குக் கடற்கரையோரம் விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதேபோல, யார் முதலமைச்சர்? என்ற குழப்பத்தையும் தீர்க்க காங்கிரஸ் திட்டம் வகுத்து வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் யார் என்பதற்கான போட்டியும் தொடங்கிவிட்டது.


மேலும் படிக்க | CM Of Karnataka: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸின் புதிய ஃபார்முலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ