ஐதராபாத்: எதிர்வரும் தெலங்கான தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றால் ஐதராபாத் நகரின் பெயர் மாற்றப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் பாஜக தரப்பில் போட்டியிடும் ராஜா சிங்கிற்கு ஆதரவாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோஷமாஹால் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 


பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் பிரிவினையை உண்டாக்குபவர்களுக்கு பாரதிய ஜனதா பாதுகாப்பளிக்காது என எச்சரித்தார். மேலும் அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைத்தால், ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைஸி மாநிலத்தை விட்டே ஓடி விடுவார், எனவும் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர்., தெலங்கானாவில் பாஜக ஆட்சியமைத்தால் ஐதராபாத் நகரத்தின் பெயர் பாக்யநகர் என பெயர் மாற்றம் செயப்படும் என தெரிவித்தார். முன்னதாக கோஷமாஹால் தொகுதியில் போட்டியிடும் ராஜா சிங்-ம் இந்த வாக்குறுதியை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


1590-களில் ஐதராபாத் பாக்யராஜ் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. குலி குதுப் ஷா ஐதராபாத் வந்த பின்னர் இந்துக்களை விரட்டி, பாக்யராஜ் என்னும் பெயரினை ஐதராபாத் என மாற்றினார் எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜக பெரும்பான்மையும் வெற்றிப்பெறும் பட்சத்தில், ஐதராபாத் நகரின் பெயரினை மாற்றுவோம் என குறிப்பிட்டார்.


முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தில் பாஸியாபாத் நகரின் பெயரினை ஆளும் பாஜக அரசு அயோத்தியா என பெயர் மாற்றம் செய்தது. அதேப்போல் அலகாபாத் நகரின் பெயரினையும் பிரியகராஜ் என பெயர் மாற்றி அதிரடி உத்தரவிட்டனர்.


நகரங்களுக்கு மட்டும் அல்லாமல், முஹல்சாராய் ரயில்வே நிலையத்தில் பெயரினையும் பன்டித் தீனதார் உப்பத்தியா சந்திப்பு என பெயர் மாற்றி நாட்டுமக்களின் கவனத்தினை பாஜக-வினர் ஈர்த்துள்ளனர். இந்நிலையில் தற்போது தெலங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தின் பெயரினையும் பாஜக மாற்ற திட்டமிட்டுள்ளது.


119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைப்பெறவுள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் நாள் என்னப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.