வயநாடு, அமேதியில் பா.ஜனதா தான் வெற்றியடையும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு, அமேதியில் பா.ஜனதா தான் வெற்றியடையும் என மேனகா காந்தி கூறியுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், இரண்டாவதாக வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவதை உறுதி செய்தனர். அமேதியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா தான் வெற்றியடையும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி அமேதியில் தோல்வியடைந்துவிடுவோம் என பயந்து இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா? என்று மேனகா காந்திஇடம் கேள்வி கேட்கப்பட்டது.


இதற்கு பதிலளித்த அவர்,  எங்கு போட்டியிட வேண்டும் என முடிவு செய்வது அவருடைய சொந்த விருப்பம். அவர் பயம் அடைந்துள்ளாரா? இல்லையா? என்பது எல்லாம் எனக்கு தெரியாது. இரு தொகுதிகளில் நாங்கள் வெல்வோம் என்று எனக்கு தெரியும் என கூறியுள்ளார். 



காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி கடந்த 1980 ஆம் டெல்லியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதை  தொடர்ந்து, சஞ்சயின் மனைவியான மேனகாவும், மகன் வருணும் காந்தி குடும்பத்தில் இருந்து விலக தொடங்கினார். இதன் விளைவாக பா.ஜனதாவில் சேர்ந்த மேனகா, தனது மகன் வருணையும் தம் கட்சிக்குள் கொண்டு வந்தார்.