ஜம்மு-காஷ்மீரில் இந்துகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் பாஜக 370 வது பிரிவைரத்து செய்திருக்கிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.  காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து அவர் கூறுகையில்; ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தான் பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுவே, ஜம்மு-காஷ்மீரில் இந்துக்கள் அதிகமாக வசித்திருந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவை பாரதீய ஜனதா கையில் எடுத்திருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கூறினார்.


"காஷ்மீரில் இந்துகல்  பெரும்பான்மையாக இருந்திருந்தால், பாஜக அதைத் தொட்டிருக்காது (கட்டுரை 370). ஆனால், காஷ்மீரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான், அவர்கள் அதை ரத்து செய்தனர்" என்று ANI செய்தி நிறுவனத்திடம் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 



மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 மட்டும்தான் இந்தியாவுக்கு முரணாக உள்ளதா?. 371-ஆவது சட்டப் பிரிவை எடுத்துக் கொண்டால், அதன் உட்பிரிவுகள் வாயிலாக நாகாலாந்து, மிஸாரம், மணிப்பூர், அஸ்ஸாம், சிக்கிம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் என பல மாநிலங்களுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாகாலாந்து தனிச் சட்டத்துக்கு உட்பட்டே அந்த மாநிலத்தில் நிலங்களை வாங்கவும், விற்கவும் முடியும். அந்த மாநிலத்தின் மதம், கலாசாரம் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசே நினைத்தாலும் நாகாலாந்தின் ஒப்புதல் இல்லாமல் சட்டம் இயற்ற முடியாது.


அதுபோலவே மிஸாரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தனி அதிகாரங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ஏன் மோடி அரசு ரத்து செய்யவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வாழும் மாநிலங்கள் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பாஜக நடந்து கொண்ட விதம் அதன் மதவெறியைத்தான் காட்டுகிறது.


இலங்கையில் தமிழர்கள் வாழும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. அதேவேளையில், காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்த முரண்பாடு?. மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பலம் பாஜகவுக்கு வந்துவிட்டால், இந்திய அரசியல் சாசனத்தையே முழுவதுமாக மாற்றி எழுதிவிடுவார்கள். ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே ஆட்சி என்பதுதான் பாஜகவின் நோக்கம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.