இந்து மாணவர்களுக்காக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கோயில் கட்டவேண்டும் என பாஜகவின் இளைஞர் அமைப்புத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக-வின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாவட்டத் தலைவர் முகேஷ் சிங் லோதி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு  இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... 


''அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான சர் சையது அகமது கான், இந்துக்களும் முஸ்லிம்களும் ஏஎம்யூவின் இரண்டு கண்கள் என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளை ஏஎம்யூ வளாகத்தில் இந்து கோயிலைக் கட்டுவதற்கான ஊக்க சக்தியாக துணை வேந்தர் பார்க்க வேண்டும்.


பல்கலைக்கழக வளாகத்தில் கோயில்கள் இல்லாததால், ஆயிரக்கணக்கான இந்து மாணவர்கள் பிரார்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர், எனவே விரைவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கோவில் கட்டி தரவேண்டும்.


இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை துணை வேந்தர் அதிகரிக்க முயற்சிக்க வேண்டும், மேலும் கோவில் கட்டுவதற்கான நிலத்தையும் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தன்னுடைய கடிதத்திற்கு அடுத்த 15 நாட்களுக்குள் துணை வேந்தர் பதில் தர வேண்டும் எனவும், இல்லையெனில் தஙுகள் அமைப்பின் தொண்டர்கள் வளாகத்துக்குள் நுழைந்து கோயில் கட்டுவர்'' எனவும் எச்சரித்துள்ளார்.


ஆனால் இதுகுறித்து ஏஎம்யூ செய்தித்தொடர்பாளர் ஷஃபே கித்வா தெரிவிக்கையில் ''லோதியிடம் இருந்து இதுவரை அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை" என தெரிவித்துள்ளார்.