பாஜக-வின் பட்ஜெட் என்பது நாட்டின் முன்னேற்றேத்தை மட்டுமே மையமாக கொண்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜீ குழுமத்தின் ப்ரதியேக நேர்காணலில் பங்கேற்றார். நேர்காணலில் நெரியாளர் சுதிர் சௌத்ரி-யால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வியக்கவைக்கும் அளவிற்கு பதில்களை அளித்தார் நம் பிரதமர்!


இந்த நேர்காணலின் போது, பாஜக-வின் பட்ஜெட் என்பது நாட்டின் முன்னேற்றேத்தை மட்டுமே மையமாக கொண்டது என பிரதமர் மோடி தெரிவித்தார்.


வருகின்ற 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான இறுதி முழு பட்ஜெட்டினை பாஜக முன்வைக்க காத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டின் நிலைப்பாடு குறித்து நெறியாளர் சுதிர் சௌத்ரி வினவுகையில், தங்களது பட்ஜெட் என்பது நாட்டின் முன்னேற்றேத்தை மட்டுமே மையமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது என பிரதமர் தெரிவித்தார்.


பணமதிப்பிழப்பு, GST போன்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நினைவில் கொன்டு அவ்விமர்சனங்களுக்கு பதில்கூறும் வகையிலும் இந்த பட்ஜெட் அனையும் என தெரிவித்தார்.


அவரது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தைரியமான நிதி முடிவுகளைப் பற்றி கேட்டபோது,...


GST மற்றும் பணமதிப்பிழப்பு இந்து இரண்டு விவகாரங்களைத் தவிர வேறு விவகாரங்களில் பாஜக மீது குறைகூற முடியுமா?... நாட்டில் 30-லிருந்து 40 சதவிகிதம் மக்கள் வங்கி சேவைக்கு அப்பால் இருந்தனர், அவர்களை வங்கி கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது ஆட்சியின் சாதனை இல்லையா? 


பள்ளிகளில் கழிவரை இல்லா காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண்கள் பள்ளிக்கு வருவதை தவிர்தனர். அவர்களை பள்ளிக்கு கொண்டு வர அரசாங்கத்தால் கழிவரை கட்டப்பட்டது சாதனைய இல்லையா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்!


மேலும் பொதுத் தேர்தலுடன் மாநில தேர்தல்களை நடத்துவதற்கு பாஜக எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்!


வெவ்வேறு கால கட்டங்களில் நடத்தப்படும் தேர்தல்களினால், ஆளும் அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்த கூட்டுத் தேர்தல் ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் எனவும், இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக வைப்பதன் மூலம் செலவுகள் மற்றும் ஆட்கள் சுமை குறைக்கப்படும் என தெரிவித்தார்.


மேலும் தனது உடலின் ஒவ்வொரு அணுவும் நாட்டிற்கு கடன்பட்டுள்ளதாகவும், நாட்டின் மக்களுக்காக பணியாற்றுவதற்கு அர்பனிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "ஒரு சாதாரண மனிதனின் கண்களில் நான் அவரது திருப்தியை நான் காணும்போது என்னுள் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது" எனவும் அவர் தெரிவத்தார்".


மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்த இந்த நேர்காணலின் தொகுப்பினை ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் காணத்தவராதீர்கள்!