முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். காந்திநகரில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி மதத் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குஜராத் பாரதிய ஜனதா தலைவர் ஜிதுபாய் வகானி தெரிவித்துள்ளார். 


குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 99 இடங்களை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றியுள்ளது.