ஜம்மு-காஷ்மீர் பள்ளி ஒன்றில் குண்டு வெடித்ததில் 10 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் பள்ளி ஒன்றில் குண்டு வெடித்ததில் மாணவர்கள் 10 பேர் காயம். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்: புல்வாமாவிலுள்ள தனியார் டுயுஷன் சென்ட்ரலில் குண்டு வெடித்ததில் பத்து மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடித்த இடத்திற்கு மீட்பு குழு மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்துள்ளனர். தீ அணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.
இதுக்குறித்து போலீசார் கூறுகையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படைகள் தகவல்கள் அறிவிக்கப்பட்டது. நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் சம்பவ இடத்திலே ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தின் பிகேம்பாக் ககபுராவில் வசிக்கும் ஹில்லாள் அஹ்மத் ரத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.