சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நாகாலாந்தில் வாக்குச்சாவடி அருகில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த தேர்தலின் பொது மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், நாகலாந்தில் வடக்கு அங்காமி தொகுதியில் என்.டி.பி.பி தலைவர் நேபியோ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரண்டு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில். தற்போது வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 


நாகாலாந்தில் மாண் மாவட்டத்தின் திஸித் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.