ப்ளூ வேல் எனும் ஆன்லைன் விளையாடிற்கு சமீபக காலமாக, சிறார்களா பெரிதும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டல் இந்தியாவில் பலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் புது டெல்லி இந்தோரை சேர்ந்த 14 வயது சிறுவன் ப்ளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகி தனது பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை சகமாணவர்கள் காப்பாற்றினார்.


இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சிறுவனை விசாரித்தப்பின் கூறுகையில் "ஆரம்பத்தில் சிறுவன் அவ்விளையாட்டை கண்டு பயந்ததகவும், பின் அவரால் அவ்விளையாட்தில் கொடுக்க பட்ட கட்டளைகளை செய்யமுடியததல் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரிவித்தது. 


இந்தியாவில் இதுபோன்ற நடப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடதக்கது.


நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?


ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.


இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. எனினும், மும்பை ஆந்தேரியில் நடந்த இந்த தற்கொலை இந்தியாவில் முதல் நிகழ்வு ஆகும்.