மும்பை சிறுவன் தற்கொலைக்கு பிறகு இனி இதுபோல் சம்பவங்கள் நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் "ப்ளூ வேல்" விளையடிற்கு அனுமதி அளிக்ககூடாது எனவும் இன்று ராஜ்ய சபாவில் விவதிகப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக திங்களன்று மும்பையில், 14 வயதான மன்ர்பீட் சஹான்ஸ், 'நீல திமிங்கில சவாலினால் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் உறுதி செய்தனர்.


நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?


ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.


இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. எனினும், மும்பை ஆந்தேரியில் நடந்த இந்த தற்கொலை இந்தியாவில் முதல் நிகழ்வு ஆகும்.