மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை (CBSE Board 10th, 12th Exam 2021 Date Sheet) இன்று வெளியிடும். இந்த பொதுத்தேர்வில் கலந்து கொள்ளப் போகும் மாணவர்கள், அதற்கான கால அட்டவணையை cbse.nic.in  மற்றும் cbseacademy.nic.in ஆகியஅதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மே மாதம், நடத்தப்பட உள்ளது. முன்னதாக டிசம்பர் 31 ஆம் தேதி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' என்னும் கலந்துரையாடலில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதிகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.


ALSO READ | CBSE 10, 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் எப்போது? கல்வி அமைச்சர் அறிவிக்கிறார்


CBSE Board 10th and 12th Exam 2021 Time Table - பதிவிறக்கம் செய்வது எப்படி:


- CBSE cbse.gov.in  என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
புதிய வலைத்தளத்தைக் கிளிக் செய்க.


- சமீபத்திய தகவல் பிரிவின் கீழ் CBSE Board 10th Exam 2021  என்ற இணைப்பைக் கிளிக் செய்க.


- வகுப்பைத் தேர்ந்தெடுத்து அடுத்த விண்டோவில் PDF கோப்பாக உள்ள CBSE Board Exam 2021 Date Sheet  என்பதை பதிவிறக்கவும்.


கொரோனா தொற்றுநோயால் சிபிஎஸ்இ இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை (CBSE Board Exam 2021 Syllabus) 30 சதவீதம் குறைத்துள்ளது.


COVID-19 நெருக்கடி உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்து சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் 2021 பொது தேர்வை எழுதும் மாணவர்கள் CBSE Board 10 மற்றும் 12 வகுப்பில்  2021 ஆன் ஆண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விபரங்களை காணலாம். 2021 ஆன் ஆண்டின் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து பாட திட்ட விபரங்களை சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR