சாந்த்கபீர் நகர்: உத்தரபிரதேசம் (Uttar Pradesh) சாந்த் கபீர் நகரில் (Sant kabir Nagar) கக்ரா ஆற்றில் (Ghagra River) படகு கவிழ்ந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இன்னும் 4 பேரை காணவில்லை என்றும், இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) குழு மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றன. இந்த சம்பவத்தை அறிந்த உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட மாஜிஸ்திரேட், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாந்தக்பீர் நகரின் அருகில் அமைந்துள்ள கக்ரா ஆற்றில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவல்களின்படி, கிராமப்புறங்களில் இருந்து விவசாயி தொழிலாளர்கள் நெல் அறுக்க இந்த கரையில் இருந்து அடுத்த கரைக்கு படகு சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில், சப்ரா கிழக்கு மற்றும் பாலம்பூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களை மீட்பு குழுவினர் தேடி வருகிறார்கள். 


அதே நேரத்தில், விபத்து பற்றி அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.


சில நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தின் ஜெகநாத்பூருக்கும் முகுந்தா காட் இடையிலான மகா நந்தா ஆற்றில் 100 பேர் நிறைந்த படகு கவிழ்ந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த விபத்தில் இதுவரை பலர் இறந்துவிட்டனர். விபத்தில் பலியானவர்கள் அக்டோபர் 03 நள்ளிரவு நடந்த படகுப் பந்தயத்தைப் பார்த்துவிட்டு, திரும்பி படகில் வரும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.