Bodyguards For Tomatoes: நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு தனித்துவமான வழியை பின்பற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மளிகைக் கடை உரிமையாளரும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தொண்டருமான அஜய் ஃபௌஜி, தனது கடையில் தக்காளிகளை 'பாதுகாக்க' இரண்டு தொழில்முறை மெய்க்காப்பாளர்களை (Bodyguards) நியமித்துள்ளார். தக்காளி விலையில் பேரம் பேசும் போது வாங்குபவர்கள் ஆக்ரோஷமாக வருவதைத் தடுக்க பவுன்சர்களை பயன்படுத்தியதாக ஃபௌஜி கூறுகிறார். 


சமாஜ்வாதி கட்சியின் தொண்டரான கட்சியின் அஜய் ஃபௌஜி, அரசியல் அறிக்கையை வெளியிட இந்த விரிவான நிகழ்ச்சியை நடத்தினார். முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி வாரணாசியில் தக்காளி வடிவ கேக்கை வெட்டி கொண்டாடினார்.


மேலும் படிக்க | கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி! 600 கிலோ தக்காளி 2 மணி நேரத்தில் விற்பனை!


“தக்காளி விலை குறித்து மக்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். எனது கடையில் தக்காளி வாங்க வருபவர்களும் பேரம் பேச முயல்கின்றனர். எனவே தொடர்ச்சியான வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, எனது கடை அருகே சீருடையில் பவுன்சர்களை நிறுத்த முடிவு செய்தேன், ”என்று ஃபௌஜி ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


ஃபாஜியின் கடையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பொருட்களின் விலையேற்றம் பற்றி குறிப்பிடும் பலகை உள்ளது, இது நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.



தக்காளியை கிலோ 140-160 ரூபாய்க்கு விற்கும் ஃபௌஜி, தனது கடையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுன்சர்களை நிறுத்தியுள்ளார். அவர் அவர்களை எவ்வளவு சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தினார் என்பதை வெளியிட மறுத்துவிட்டார். "பவுன்சர்களை யாரும் இலவசமாக வேலை வாங்க மாட்டார்கள்" என்று மட்டும் சொன்னார். 


பவுன்சர்களை வைத்திருப்பது அவருக்கு எப்படி உதவியது என்று கேட்டதற்கு, மக்கள் ஒரே எண்ணிக்கையில் வந்தாலும், இப்போது விலை நிர்ணயம் செய்வதில் அவர்கள் அதிகம் பேரம் பேசுவதில்லை என்று ஃபாஜி கூறினார்.


சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், ஃபௌஜி மற்றும் அவரது பவுன்சர்கள் தொடர்பான செய்தி வீடியோவை படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் "பாஜக தக்காளிக்கு 'இசட்-பிளஸ்' பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | 60 மூட்டை தக்காளி திருட்டு... இன்றைய விலையில் அது எத்தனை லட்சம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ