கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி! 600 கிலோ தக்காளி 2 மணி நேரத்தில் விற்பனை!

தக்காளி கடந்த ஒரு வார காலமாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.   

Written by - RK Spark | Last Updated : Jul 7, 2023, 12:44 PM IST
  • ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20க்கு விற்பனை.
  • கடலூரில் விற்பனை நடைபெற்றது.
  • மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி! 600 கிலோ தக்காளி 2 மணி நேரத்தில் விற்பனை! title=

வட மாவட்டத்திலும் வட மாநிலங்களிலும் பெங்களூரிலும் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் காய்களின் விலைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளது, குறிப்பாக தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய விலை என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தக்காளி கடந்த ஒரு வார காலமாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி வாங்கும் மக்கள் 100 கிராம் 200 கிராம் வாங்கும் நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் இன்று காலை கடலூர் பகுதியில் ஒரு காய்கறி கடையில் தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை என பதாகை வைத்துள்ளார். இதனால் தக்காளியை வாங்க அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஏராளமான மக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி கடையில் தக்காளியை வாங்கினார். கடை உரிமையாளர் ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்த அடிப்படையில் முண்டியடித்துக் கொண்டு அனைவரும் ஒரு கிலோ என இருபது ரூபாய்க்கு தக்காளி வாங்கிச் சென்றனர், இதனால் அந்த கடை முழுவதும் கூட்டம் அலைமோதியது.

மேலும் படிக்க | ஆளுநர் நெனச்சா மந்திரி! இல்லன்னா எந்திரி : ஹெச்.ராஜா

மேலும், தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு  ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளியை வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.  அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை துவங்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலமாக மலிவு விலையில் தக்காளி விற்பனை சேவையை இன்று முதல்  தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்பட்ட மலிவு விலை தக்காளியை வாங்க ஏராளமான ஆண்கள் பெண்கள் என ஒரே நேரத்தில் குவிந்து காத்துக்கிடந்து தக்காளியை  வாங்கிச்சென்றனர். மேலும் தற்போது கூட்டுறவுத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் குறிப்பாக தொடக்க கூட்டுறவு சங்கங்களின் சார்பில் மாலை நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களில் இச்சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கணவருக்கு தெரியாமல் குழந்தை பெற்ற பெண்: குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News