மும்பை: வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் தெரியாமல் இருப்பதற்காக தீர்ப்புகளை பதிவேற்றம் செய்வதையும் ஊடகங்களில் செய்தி வெளியிடுவதையும் தடைசெய்த வழிகாட்டுதல்கள் ' வழக்குகளின் தன்மையை பொறுத்தவை என்று பம்பாய் உயர்நீதிமன்றம் தெளிவு படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2013ம் ஆண்டின், பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் (Protection of Women from Sexual Harassment (POSH) Act 2013) கீழ் உள்ள அனைத்து வழக்குகளும் 'வழக்கு சார்ந்தவை' என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. 


ஐந்து மாதங்களுக்கும் முன்னர் பம்பாய் உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகு, ஊடகங்களில் செய்தி வெளியிடுவது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தன.


மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்


இன்று இதுதொடர்பாக தெளிவுபடுத்திய நீதிபதி கெளதம் படேல், தனது 24 செப்டம்பர் 2021 உத்தரவில், வழிகாட்டுதல்கள் வழக்குக்கு குறிப்பிட்டதாக குறிப்பிடப்படவில்லை என்றும், இரு தரப்பினரின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டார்.


மேலும், தலைமை நீதிபதி அல்லது முழு நீதிமன்றம் மட்டுமே அத்தகைய விதிகளை வெளியிட முடியும், அதன்பிறகு, அந்த விதியை அதிகாரப்பூர்வ கேஜட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி கெளதம் படேல் தெரிவித்தார். 


பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றம்" தாக்கல் செய்த தலையீட்டு விண்ணப்பத்தை (intervention application) தள்ளுபடி செய்யும் போது நீதிபதி படேல் தனது வழிகாட்டுதல்களை தெளிவுபடுத்தினார்.


வழிகாட்டுதல்கள் இயற்கையில் பொதுவானவை. வழிகாட்டுதல்கள் POSH சட்டத்தின் மாண்புக்கும் நோக்கத்திற்கும் எதிரானது மட்டுமல்ல, திறந்த நீதிமன்றங்களின் கருத்துருவுக்கும் எதிரானது என்று அமைப்பு வாதிட்டது. 


மேலும் படிக்க | பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு


செப்டம்பர் 24 உத்தரவுகளின்படி, POSH வழக்கில் பாதிக்கப்பட்டவர், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது சாட்சியின் அடையாளத்தை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது,  அத்தகைய நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் நீதிபதியின் அறையில் கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், எந்த ஒரு தரப்பினரும் வழக்கின் இறுதி முடிவு உட்பட எந்த விவத்தையும் வெளியிட அனுமதிக்கப்படவில்லை, 


மேலும் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி தீர்ப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியிடக்கூடாது என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.


"அந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட் வேண்டும்" என்று நீதிபதி படேல் சமீபத்திய உத்தரவில் கூறினார். அவரைப் போன்ற ஒரு நீதிபதி, தனித்தனியாக அமர்ந்து, முழு நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்தும் விதிகளை வெளியிடும் "அதிகாரம் அல்லது அதிகார வரம்பு" இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
செப்டம்பர் 24ம் தேதியன்று வெளியான நீதிபதி படேலின் உத்தரவு, பெண்களின் குரல்களை அடக்குவதற்கு வலிமையான ஆண்களுக்கு உதவும் என்று கூறப்பட்டது.


மேலும், வழக்கின் தன்மையைப் பொறுத்தே வழிகாட்டுதல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; போஷ் சட்டத்தின் கீழ் செய்தி வெளியிடுவதை முழுமையாக தடை செய்யவில்லை என்றும், செய்தி வெளியிடுவதற்கு தடை செய்ய தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி கெளதம் படேல் சுட்டிக்காட்டினார்.


மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR