அமித் ஷா எச்சரிக்கையை அடுத்து, ஆயுதங்களுடன் சரணடைந்த வன்முறையாளர்கள்! ஊரடங்கு உத்தரவு தளர்வு
Manipur Violence: மணிப்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமித்ஷாவின் எச்சரிக்கையை அடுத்து நான்கு மணி நேரத்தில் 140 ஆயுதங்கள் சரணடைந்த வன்முறையாளர்கள்.
Manipur News: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எச்சரிக்கைக்கு பிறகு, மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் எஸ்எல்ஆர் 29, கார்பைன், ஏகே துப்பாக்கி, இன்சாஸ் ரைபிள், இன்சாஸ் எல்எம்ஜி, எம்16 ரைபிள் மற்றும் கையெறி குண்டுகள் போன்ற ஹைடெக் துப்பாக்கிகள் என 144 ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளனர் என மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். வியாழன் அன்று, அமித் ஷா மணிப்பூர் மக்களிடம் வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். மேலும் ஆயுதம் வைத்திருப்பவர்கள் காவல்துறையில் சரணடைய வேண்டும். ஜூன் 2 முதல் தேடுதல் பணி தொடங்கும். யாரேனும் ஆயுதம் வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். 24 மணி நேரத்துக்குப் பிறகு, பல குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். மறுபுறம், மாநிலத்தின் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரின் சுமார் 2 ஆயிரம் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்த அமித் ஷா:
ஒரு மாதமாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவம் நடைபெற்று வந்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு நாள் பயணமாக மே 29 அன்று மணிப்பூர் சென்றடைந்தார். அவர் மே 29 முதல் ஜூன் 1 வரை அதாவது 4 நாட்கள் மாநிலத்தின் முகாமிட்டு பலரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இருதரப்பு சமுதாய மக்களின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த நான்கு நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல முடிவுகளை எடுத்தார். இதில், மாநில டிஜிபியை நீக்கும் முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவருடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டேகா ஆகியோரும் உடன் இருந்தனர்.
வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்:
ஜூன் 1 ஆம் தேதி மாலை அமித் ஷா டெல்லி திரும்புவதற்குள் மாநில டிஜிபி பி.டோங்கல் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜீவ் சிங்குக்கு மாநில காவல்துறையின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் நேற்று (ஜூன் 1) அமித் ஷா செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்பொழுது வன்முறையைத் தவிர்த்து, மாநிலத்தில் அமைதியைப் பேணுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று மணிப்பூர் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். ஆயுதம் வைத்திருப்பவர்கள் காவல்துறையில் சரணடைய வேண்டும். ஜூன் 2 ஆம் தேதி முதல் தேடுதல் பணி தொடங்கும். யாரேனும் ஆயுதம் வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு:
உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியால் வன்முறையை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பதாகவும், வன்முறை தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குகி மற்றும் மேதேயி சமூக மக்களைச் சந்தித்த பேசிய அமித் ஷா:
மே 31 அன்று, ஷா இம்பாலில் உள்ள ஒரு நிவாரண முகாமுக்குச் சென்றார். மெய்டேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று மக்களிடம் கூறினார். விரைவில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவது உறுதி செய்யப்படும். குக்கி சமூகத்தின் அமைப்புகளுடன் ஷா ஒரு சந்திப்பையும் நடத்தினார். மணிப்பூரில் அமைதியே முதன்மையானது என்று அதிகாரிகளிடம் அவர் கூறியிருந்தார். அமைதியை நிலைநாட்ட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க - மணிப்பூரில் 23,000க்கும் மேற்பட்டவர்களை மீட்ட ராணுவம்.. கண்காணிப்பு தீவிரம்!
வன்முறையில் கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் சிறப்புத் தொகுப்பு:
மே 30 செவ்வாய்க்கிழமை காலை, அமித் ஷா சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பழங்குடியின சமுதாய மக்களின் தலைவர்கள் ஆகியோருடன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மணிப்பூர் அரசு 5 லட்சமும், மத்திய அரசு 5 லட்சமும் வழங்கப்படும் என்று அமித் கூறினார். அதே நேரத்தில், வன்முறையில் காயமடைந்தவர்களுக்கும், சொத்துக்கள் சேதம் அடைந்தவர்களுக்கும் நிவாரணப் பொதியை உள்துறை அமைச்சகம் வெளியிடவுள்ளது எனவும் கூறினார். மாநிலத்தில் ரேஷன் மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
இதுவரை வன்முறையில் 98 பேர் உயிரிழப்பு:
மே 3-ம் தேதி மணிப்பூரில் வன்முறை தொடங்கியது. தலைநகர் இம்பாலை ஒட்டியுள்ள செராவ் மற்றும் சுக்னு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை மோதல்கள் வெடித்தன. இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். மாநிலத்தில் வன்முறை காரணமாக இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர், 310 பேர் காயமடைந்துள்ளனர். மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் அவசர முடிவால் இங்கு வன்முறை நடந்துள்ளது. அதாவது, ஏப்ரல் 29 அன்று, உயர் நீதிமன்றம் மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து மே 3 அன்று போராட்டங்கள் நடந்தன. பிறகு அது வன்முறையாக மாறியது.
மேலும் படிக்க - பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி - நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ