WHO vs Covaxin: அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசியை WHO அங்கீகரித்தது!
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிம்அவசரகால பயன்பாட்டிற்கு உகந்தது என WHO அங்கீகரித்தது...
புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு இன்று முக்கியமான நாள். பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிம்அவசரகால பயன்பாட்டிற்கு உகந்தது என WHO அங்கீகரித்தது...
கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பட்டியலை உலக சுகாதார மையம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் (emergency use listing, EUL) WHO சேர்த்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், கோவேக்சின் தடுப்பூசி உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த கோவாக்ஸின் போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் இன்று நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காத வரை, தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கூட வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்துவந்த மக்களுக்கு இன்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கோவிட் தடுப்பூசி நிபுணர் குழு, மூலோபாய ஆலோசனை குழு நிபுணர்கள் குழு (Strategic Advisory Group of Experts (SAGE)) பாரத் பயோடெக்கின் தடுப்பூசி குறித்து பரிசீலனை செய்தது.
Also Read | நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR