வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது Supreme Court
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
புதுடெல்லி: மேலதிக உத்தரவு வரும் வரை மூன்று வேளான் சட்டங்களின் அமலாக்கத்தையும் நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேளாண் நிபுணர்களின் கீழ் நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிக்கைகளின்படி, வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, ஹர்சிம்ரத் மன், பிரமோத் ஜோஷி போன்றவர்கள் குழு உறுப்பினர்களாக இருக்கக்கூடும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மூன்று புதிய வேளான் சட்டங்கள் (Farm Laws) தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களாக டெல்லி எல்லைகளில் நடந்த இடைவிடாத போராட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய உச்சநீதிமன்றம், ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த சட்டத்தின் மீதான முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, இந்த விவகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது. மேலும் உத்தரவு வரும் வரை வேளான் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
"நாங்கள் 3 சட்டங்களின் அமலாக்கத்தையும் தற்போது நிறுத்தி வைக்கிறோம். அடுத்த உத்தரவு வரும் வரை சட்டங்களை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்தி வைக்கப் போகிறோம்” என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) எஸ்.ஏ.போப்டே கூறினார்.
மெய்நிகர் விசாரணைக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ALSO READ: Farmers Protest: தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரிக்கை
வேளான் சட்டங்களின் உண்மைத்தன்மை குறித்த மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் (Supreme Court), விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தாங்கள் விழிப்புடன் இருப்பதாகவும், இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவே ஒரு குழுவை அமைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
CJI தலைமையிலான பெஞ்ச் குறிப்பிட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் - ஹர்ஸ்மிரத் மன், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி (தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை தேசிய அகாடமி) மற்றும் அனில் தனாவத் ஆகியோராவர்.
நீதிமன்றம், விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறது என்றும் அதன் காரணமாகத்தான் நீதிமன்றம் இதற்காக ஒரு குழுவை அமைக்க விரும்புகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழு இது தொடர்பான அறிக்கையை பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த குழுவிடம் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.
மூன்று வேளான் சட்டங்களை ஆராய ஒரு குழுவை அமைக்கும் உச்சநீதிமன்றத்தின் திட்டத்தை அட்டர்னி ஜெனரலும் சொலிசிட்டர் ஜெனரலும் வரவேற்றனர்.
"நாங்கள் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் குழுவை உருவாக்குகிறோம். குழுவிடம் நாங்கள் செல்ல மாட்டோம் என யாராவது வாதாடினால், அப்படிப்பட்ட வாதத்தை நாங்கள் கேட்க விரும்பவில்லை. 400 உழவர் அமைப்புகள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை அமைப்புகள் உள்ளனவோ அத்தனை விதமான கருத்துகளும் உள்ளன. உண்மையான பிரச்சினை என்ன என்பதை அறிய குழுவை உருவாக்குகிறோம். வக்கீல்களின் பார் உறுப்பினர்கள் நீதித்துறை செயல்முறைக்கு விசுவாசத்தைக் காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் அல்ல. இது நீதித்துறை” என்று தலைமை நீதிபதி கூறினார்.
நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த விவசாயிகள் போராட்டத்திற்கு (Farmers Protest) இன்று தீர்வுக்கான ஒரு பாதை கிடைத்துள்ளது. இதுவரை அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
ALSO READ: வாஜ்பாயின் பிறந்த நாளில் 9 கோடி விவசாயிகளுடன் பிரதமர் உரையாடுகிறார்...!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR