2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் இந்த மாநிலத்தின் பங்கு முக்கியமானது. எனவே, தேசியக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களாக அறியப்படுகிறவர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து போட்டியிடுவது வழக்கமாக இருந்துவருகிறது.


உத்தரப் பிரதேச்சத்தின் இரு பெரும் பிராந்தியக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தமுறை கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்று பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.


அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி அதிக தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற தீவிரத்தில் பகுஜன் சமாஜ் உள்ளது. இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது;  ‘எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவேன் என்று எனக்குத் தெரியும். BJP-யை வீழ்த்துவதற்காக, SP-RLD வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதைவிட நாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவதே முக்கியம்.


நம் கட்சியை வலுப்படுத்துவதற்காக, முன்னர் ஒருமுறை ராஜ்யசபா எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை மனதில்கொண்டு இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.