கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் உத்தரபிரதேச மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக வந்த ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரி, காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் பிரசாத் சவுத்திரி, சந்தீப் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் பல என்கவுண்டர்கள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அது உண்மை என்று நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களின் அடிப்படியில், சட்டம் என்பதே உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டு உள்ளது.


 



நான் முதலமைச்சராக இருந்திருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட போலிஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தேன், பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்திருப்பேன். ஆனால் தற்போதைய பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவில்லை என பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.