உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாசுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித் பிரிவினருடன் சேர்ந்து அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த சம்பவம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. ஏன் என்றால் தலித் வாக்குகளை நம்பிதான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே அமித்ஷாவை தர்ம சங்கடத்தில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சியின் சமையல்காரரை வலைவீசி தேடிவருகிறதாம் பகுஜன் சமாஜ் கட்சி. அதாவது அமித்ஷா தலித்துகளோடு சேர்ந்து  உணவு சாப்பிட்டிருந்தாலும் அந்த சமையலை சமைத்தது உயர் ஜாதி பிரிவை சேர்ந்த சமையல்காரராம். அந்த சமையல்காரரை கண்டடுப்பிடித்து கூட்டி வந்து உண்மையை அம்பலப்படுத்தி விட்டால் அது அமித்ஷாவுக்கு எதிராக முடியும். அதனால் தலித்துகள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது என்று திட்டமிட்டுள்ளாராம் மாயாவதி. 


விரைவில் சமையல்காரரை பிடித்து உலகத்திற்கு அம்பலப்படுத்துவோம் என பகுஜன் சமாஜ் கட்சி சேர்ந்த ராம்குமார் குரீல் கூறியுள்ளார்.