பட்ஜெட் 2019: உழவர்களுக்கு வருடாந்தம் 8-10 ஆயிரம் ரூபாய்கள் சம்பளம்?
இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் உழவர்கள் பயன்பெறும் வகையில் சலுகைகள் இருக்கலாம் எனத்தெரிகிறது.
இன்று இடைக்கால பட்ஜெட்டை பியுஷ் கோயல் தாக்கல் செய்கிறார். மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்தால் இடைக்கால பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு மற்றும் உழவர்கள் பயன்பெறும் வகையில் சலுகைகள் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் உழவர்களுக்கு சில சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு உழவர் கணக்கிலும் பணம் செலுத்தப்படும். ஏற்கனவே நிதி ஆயோக் கமிஷன் ஒவ்வொரு உழவர் கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்க வரை செலுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டத்தை கிசான்(விவசாயி) கடன் அட்டை மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாட்டின் 3 கோடி உழவர்கள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் வட்டி இல்லா இலவச கடன்கள் அறிவிக்கப்படலாம். மேலும் பயிர் காப்பீட்டுத் திட்டமும் தொடங்கப்படலாம். இந்த சலுகைகள் அறிவித்தால், அரசுக்கு குறைந்தது 70 ஆயிரம் முதல் 1 லட்சம் கோடி வரை செலவு ஏற்ப்படலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உழவர்களுக்கு மோடி அரசு நிறைய திட்டங்களை தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத்திற்கு ஒரு பெரிய ஒதுக்கீடு செய்யப்பட்டது, அது உழவர்களுக்கு பயன் அளித்தது. இது தவிர, எம்.எஸ்.பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) அதிகரிகப்பட்டது. உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இன்றைய பட்ஜெட்டில் உழவர்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம்.
1. ஒரு குடும்பத்தை ஆண்டுதோறும் 8000-10,000 ரூபாய் கொடுக்கப்படலாம்.
2. 3 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படலாம்.
3. அடமானம் எதுவும் இல்லாமல் 2 அல்லது 3 லட்சம் வரை கடன் கிடைக்க வசதி.
4. பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
5. பயிர் காப்பீடு பிரீமியம் தள்ளுபடி செய்யப்படலாம்.