2020 பட்ஜெட்டுக்கு முன், பொது மக்களுக்கான 12 பெரிய அறிவிப்பு என்ன?
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதியமைச்சர் அறிவிக்கக்கூடிய 12 முக்கிய அறிவிப்புகள் என்ன என்று பார்ப்போம்.
புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் (Budget 2020) செய்ய உள்ளார். ஒட்டுமொத்த தேசத்தின் கண்களும் இன்று நிதியமைச்சர் மீது இருக்கும். வணிக உலகில் இருந்து சாமானியர்கள் வரை அனைவரும் தங்கள் பட்ஜெட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அவரது பட்ஜெட் புத்தகத்தில் இருந்து என்ன வரலாம் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன. நிதியமைச்சர் இன்று செய்யக்கூடிய 12 அறிவிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
பட்ஜெட்டில் என்ன சாத்தியம்?
- வரிச்சலுகை அல்லது வரவு செலவுத் திட்டத்தில் வரம்பை அதிகரிப்பதன் மூலம் வரி விலக்கு சாத்தியமாகும்
- கிராமப்புற இந்தியாவுக்கான செலவு அதிகரிக்கும்.
- பெண்களின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு அதிகரிக்கும்.
- வீட்டுக்கு வீடு சுத்தமான குடிநீரை வழங்க அதிக பணம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- கல்விக்காக அரசு 1 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்ய முடிவு எடுக்கலாம்.
- மேக் இன் இந்தியா வரிசையில் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம்
- மேக் இன் இந்தியா கீழ் புதிய திட்டத்தை தொடங்கலாம்
- ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டம் அறிவிக்கப்படும்
- வேலைவாய்ப்பை அதிகரிக்க சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரண தொகுப்பு
- உள்கட்டமைப்புக்கான செலவினங்களை அரசு அதிகரிக்கும், சிறப்பு நிதி தயாரிக்க முடியும்
- ரயில்வேயில் பெரிய முதலீட்டை அரசு அறிவிக்க வாய்ப்பு.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, பல தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.