Budget 2021: Digital ஆனது budget: நிதி அமைச்சரின் கையில் ஆவணங்களுக்கு பதில் Tablet
இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் முதல் முறையாக காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படும். 2021 வரவுசெலவுத் திட்டம் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய COVID தொற்றுநோய்க்கு மத்தியில் வழங்கப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
Union Budget 2021: மத்திய பட்ஜெட் 2021 முதல் முறையாக காகிதமற்ற முறையில் வழங்கப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பஹி காடா’ எனப்படும் கணக்கு லெட்ஜர்கள் அதாவது வழக்கான பட்ஜெட் ஆவணங்களுக்கு பதிலாக இந்த முறை டேப்லெட்டுடன் பட்ஜெட் அமர்வுக்கு வருவார்.
பட்ஜெட் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் அடங்கியுள்ள ஒரு டேப்லெட்டை நிர்மலா சீதாராமன் ஒரு சிவப்பு வண்ண உரைக்குள் வைத்து எடுத்து வந்தார். அதில் தங்க நிறத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அவரது அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகளுடன், நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.
2019 ஆம் ஆண்டில், நிர்மலா சீதராமன் பட்ஜெட் ஆவணங்களை தோல் ப்ரீஃப்கேசில் எடுத்துச் செல்லும் நீண்டகால பாரம்பரியத்தை மாற்றினார். அதற்கு பதிலாக 'பஹி-கட்டா' எனப்படும் சுதேசி துணிப் பையில் அவர் ஆவணங்களை பட்ஜெட் (Budget) அமர்வுக்கு கொண்டு வந்தார். மோடி அரசாங்கம் ஒரு "சூட்கேஸ் சுமக்கும் அரசாங்கம்" அல்ல என்று அவர் கூறியிருந்தார்.
இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் முதல் முறையாக காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படும். 2021 வரவுசெலவுத் திட்டம் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய COVID தொற்றுநோய்க்கு மத்தியில் வழங்கப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை மற்றும் பட்ஜெட் வழங்கலை சமீபத்தில் நிதியமைச்சர் அறிமுகப்படுத்திய ‘யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்’ நேரடியாகப் பார்க்கலாம்.
புதிதாக தொடங்கப்பட்ட யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி (Mobile App) சட்டமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் பட்ஜெட் ஆவணங்களை எந்த வித தடையுமின்றி எளிதாக அணுக உதவுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எளிமையான டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்தி பட்ஜெட் ஆவணங்களை தொந்தரவில்லாமல் அணுகுவதற்காக நிதியமைச்சர் "மத்திய பட்ஜெட் மொபைல் பயன்பாட்டை" அறிமுகப்படுத்தியதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR